மண்டபம் அருகே பெற்ற குழந்தையை எரித்து கொன்ற போதை தந்தை கைது

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளை குஞ்சார் வலசை பகுதியை சேர்ந்தவர் ராஜ். இவரது மகன் முனியசாமி, 26. மீன் தொழிலாளியான இவர், ஓய்வு நேரங்களில் டிரைவராகவும் வேலை பார்த்தார். இவருக்கும் பாம்பன் அக்காள் மடம் மீனவர் காலனியைச் சேர்ந்த மரியா அயிஷாவிற்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு அபினேஷ் என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த 28ஆம் தேதி மரியா ஆயிஷாவின் தங்கை திருமணம் அக்காள் மடத்தில் நடந்தது. இத் திருமணத்திற்கு சென்ற இடத்தில் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது குடிபோதையில் இருந்த முனியசாமி, குழந்தையை தன்னிடம் தருமாறு கேட்டு மரியா அயிஷாவிடம் தகராறு செய்தார். குழந்தையை தர மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட மரியா அயிஷாவை முனியசாமி தாக்கி விட்டு, அவரிடம் இருந்து குழந்தையை பறித்துக்கொண்டு ஆட்டோவில் ஊர் திரும்பிய முனியசாமி மண்டபம் முகாம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி தண்டவாளம் வழியாக நடந்து சென்றார். வேதாளை சமத்துவபுரம் அருகே உள்ள பல்க்கில் பெட்ரோல் வாங்கி கொண்டு , அங்குள்ள திறந்த வெளியில் குழந்தையின் கழுத்தை நெரித்து கொன்று பெட்ரோலை ஊற்றி எரித்து விட்டு முனியசாமி வீடு திரும்பினார். நேற்று காலை முனியசாமி, புதுவலசை தாவு காடு பகுதியில் உள்ள அவரது தங்கை வீட்டிற்கு சென்றார். அவருடன் குழந்தை இல்லாதது குறித்து, மரிய அயிஷாவிற்கு முனியசாமி தங்கை போனில் தகவல் தெரிவித்தார். குழந்தை குறித்து கேட்ட போது ஒரு இடத்தில் இருப்பதாக முனியசாமி நாடகமாடினார்.
இதில் சந்தேகமடைந்த மரிய ஆயிஷா இது குறித்து போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணையில் குழந்தையை முனியசாமி எரித்துக்கொன்றது தெரிந்தது. அவரது தகவல்படி எரிந்து கரிக்கட்டையான குழந்தையின் உடலை மண்டபம் போலீசார் மீட்டு, முனியசாமியை கைது செய்தனர்.

Hala’s Touch of Traditional Taste

Hala’s Touch of Traditional Taste

Now you can ORDER online & @Amazon @Flipkart @Snapdeal