சுரண்டை சுற்றுப் பகுதிகளில் பொதுமக்களை அச்சுறுத்தும் நாய்க்கூட்டங்கள்; பிடித்துச்செல்ல பொதுமக்கள் வலியுறுத்தல்..

தென்காசி மாவட்டம் சுரண்டை, மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் கடந்த சில வாரங்களாக நாய்க்கூட்டங்கள் 10 முதல் 15 நாய் என கூட்டாக சுற்றி வந்து பொதுமக்களுககும் வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு விளைவித்து வந்தன. ஊருக்குள் சுற்றித் திரிந்த நாய்கள் தற்போது போக்குவரத்து அதிகம் காணப்படும் சுரண்டை மற்றும் கீழச்சுரண்டை  பங்களாச் சுரண்டை வாடியூர் ரோடு  மற்றும் மெயின் ரோட்டில்  அங்குமிங்கும் கூட்டமாக திரிவதால் இவ்வழிேயே வரும் வாகன ஓட்டிகள் அடிக்கடி நாய்கள் மேல் மோதி விபத்து ஏற்பட்டு வருகிறது. மேலும் வாகன ஓட்டிகளை விரட்டுவதால் வேகமாக செல்லும் போதும் விபத்துகள் ஏற்படுகிறது. இப்பகுதியில் பலர் நாய்கடியினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்த ரோட்டில் பயணிக்கும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மரணபயத்துடனே இந்த ரோட்டை கடக்க வேண்டியுள்ளது.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மெயின்ரோட்டில் சுற்றித் திரியும் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்களும் வாகன ஓட்டிகளும்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Hala’s Touch of Traditional Taste

Hala’s Touch of Traditional Taste

Now you can ORDER online & @Amazon @Flipkart @Snapdeal