சாத்தூரில் வழக்கறிஞர்களுக்கு எம்எல்ஏ நிதியுதவி….

கொரோனா பேரிடர் காலத்தில், சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நலிவடைந்த வழக்கறிஞர்களுக்கு அதிமுக எம்எல்ஏ ராஜவர்மன் நிதியுதவி வழங்கினார்.விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் வைரஸ் தொற்று காரணமாக, நீதிமன்றம் முழுமையாக செயல்படமுடியாத நிலை உள்ளது. இதனால் வழக்கறிஞர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நலிவடைந்த வழக்கறிஞர்களுக்கு, சாத்தூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ ராஜவர்மன் நிதியுதவி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாநில அம்மாபேரவை துணை செயலாளர் வழக்கறிஞர் சேதுராமனுஜம், நகர செயலாளர் வாசன், சாத்தூர் மேற்கு ஒன்றியகழக செயலாளர் தேவதுரை, வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய கழக செயலாளர் ராமராஜ்பாண்டியன், வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றியகழக செயலாளர் எதிர்கோட்டை மணிகண்டன், வெம்பக்கோட்டை சேர்மன் பஞ்சவர்ணம் அக்ரிகணேசன் உட்பட மாவட்ட, ஒன்றிய பகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், கட்சியினர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Hala’s Touch of Traditional Taste

Hala’s Touch of Traditional Taste

Now you can ORDER online & @Amazon @Flipkart @Snapdeal