அலங்காநல்லூர் அருகே இளைஞர் கொலை: கொலையாளி தலைமறைவு..

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே இளைஞரை கொலை செய்து விட்டு, கொலையாளிகள் தலைமறைவாகியுள்ளனர். அலங்காநல்லூர் அருகே அய்யணக்கவுன்டன் பட்டியைச் சேர்ந்தவர் பாரதி.இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஆண்டவருக்கும் முன்பகை இருந்து வந்தது.இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இரு தரப்பிரினரிடேயே மோதல் ஏற்பட்டதில், ஆண்டவன் பலத்த காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அய்யணக்கவுன்டன் பட்டியைச் சேர்ந்த பாரதியின் மகன் ஜெயசூர்யா 22.இவரும் அவரது சித்தப்பா பாலனும், அலங்காநல்லூர் கல்லனையிலிருந்து, அய்யனக்கவுன்டன் பட்டிக்கு சென்று விட்டு, இரு சக்கரவாகனத்தில், திரும்பிக் கொண்டிருந்தனர்.அப்போது சின்ன இலந்தைக் குளம் அருகே இவர்கள் மீது மோட்டார் சைக்கிளில் மீது மோதி கீழே தள்ளியதில் பாலன் ஓடிவிட்டார்.ஜெயசூர்யாவுக்கு அரிவாள் வெட்டு விழுந்து பலத்த காயத்துடன் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே இறந்தார்.இறந்த ஜெயசூர்யா அலங்காநல்லூர் கல்லனையில் கனராவங்கி பகுதியில் குடியிருந்தார்.இக் கொலை குறித்து அலங்காநல்லூர் போலிஸார், ஆண்டவர் மகன் மஞ்சமணி 25 மற்றும் மூவர் மீது வழக்குப் பதிவு செய்து கொலையாளியை தேடி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Hala’s Touch of Traditional Taste

Hala’s Touch of Traditional Taste

Now you can ORDER online & @Amazon @Flipkart @Snapdeal