திருவில்லிபுத்தூர் அருகே முட்டை ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்து….

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகே, கேரளாவிற்கு முட்டைகள் ஏற்றிச் சென்று கொண்டிருந்த லாரி கவிழ்ந்து விபத்து. ஓட்டுனர் படுகாயமடைந்தார்.நாமக்கல்லில் இருந்து கேரளா மாநிலம் புனல்வேலிக்கு, முட்டைகள் ஏற்றிக் கொண்டு திருவில்லிபுத்தூர் வழியாக ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. நாமக்கல்லைச் சேர்ந்த தங்கராஜ் என்பவர் லாரியை ஓட்டி சென்று கொண்டிருந்தார். திருவில்லிபுத்தூர் ஆவின் பாலகம் அருகே, தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாரதவிதமாக லாரி கவிழ்ந்தது. இடிபாடுகளில் சிக்கி ஓட்டுனர் தங்கராஜ் படுகாயமடைந்தார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் லாரியிலிருந்த சுமார் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள முட்டைகள் உடைந்து சேதமானது. விபத்து குறித்து திருவில்லிபுத்தூர் நகர் காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இந்த விபத்தால் சுமார் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Hala’s Touch of Traditional Taste

Hala’s Touch of Traditional Taste

Now you can ORDER online & @Amazon @Flipkart @Snapdeal