மதுரை சோழவந்தான் கீழ மாத்தூர் பகுதியில் மழையால் பாதித்த குடும்பத்தினருக்கு உதவி கரம் நீட்டிய எஸ்.டி.பி.ஐ கட்சி ..!

மதுரை சோழவந்தான் கீழ மாத்தூர் பகுதியை சேர்ந்த மூன்று குடும்பத்தினர் சமீபத்தில் கொட்டிய மழையால் பாதிக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் வீடியோ பரவலாக பரவி இருந்தது. அதற்கு முன்னதாகவே எஸ்.டி.பி.ஐ கட்சி கீழ மாத்தூர் கிளை நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி செய்ய கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மதுரை மாவட்ட தலைவர் முஜிபுர் ரஹ்மான் மாவட்ட பொதுச்செயலாளர் சாகுல் ஹமீது ஆகியோர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து மூன்று மாதத்திற்கு தேவையான உணவு பொருட்கள் வழங்கினார்கள்.

மேலும் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தர உறுதியளித்தனர். இந்நிகழ்வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பகுர்தீன், எஸ்.டி.டி.யூ மதுரை மாவட்ட செயலாளர் இப்ராஹிம் பாபு,  கீழ மாத்தூர் கிளை நிர்வாகிகள் ஷாஜி, ஷாஜஹான், அரபாத் ஆகியோர் உடன் இருந்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Hala’s Touch of Traditional Taste

Hala’s Touch of Traditional Taste

Now you can ORDER online & @Amazon @Flipkart @Snapdeal