74வது சுதந்திர தின விழா ! திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கொடி ஏற்றினார்.

திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் சார்பில், சுதந்திர தின விழா மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தின் 74வது சுதந்திர தின விழாவையொட்டி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கே எஸ் கந்தசாமி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினா்.இந்த விழாவில் கரோனா நோய்த் தொற்று தடுப்பு முன்களப் பணியாற்றி,நோய்த் தொற்றால் உயிரிழந்த முன்னாள் ராணுவ வீரர், செவிலியர்களுக்கு விருது வழங்கப்பட்டது.இந்த விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் மாவட்ட வருவாய் அலுவலர் , சார் ஆட்சியர் க.இளம்பகவத், துணை ஆட்சியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இதனைத்தொடர்ந்து செங்கம் அடுத்த மேல்பெண்ணாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா சமூக இடைவெளியுடன் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் விஜய் தலைமை தமிழ் தாங்கி கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார். பள்ளி தலைமையாசிரியர் ஜெயந்தி அனைவரையும் வரவேற்று பேசினார். பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கண்ணுப்பிள்ளை பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் மீனா சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ஒன்றியக்குழு தலைவர் குமார் கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர் விழாவானது சமூக இடைவெளியுடன் நடைபெற்றது.செங்கம் வட்டார வள மையத்தில் ஆசிரியர் பயிற்றுனர் முருகன் கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார்.

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image