கீழக்கரையில் உள்ள புதுக்கிழக்கு தெரு குடியிருப்பு பகுதியில் உள்ள குப்பைகிடங்கு பிரச்சினைக்கு தீர்வு காண திமுக சார்பில் ஆட்சியரிடம் மனு..

இராமநாதபுரம் மாவட்டம்  கீழக்கரையில் பொதுமக்கள் அதிக அளவில் வசிக்கும் 3வது வார்டுக்கு உட்பட்ட புது கிழக்குத் தெருபகுதியில் மத வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் குப்பை மறுசுழற்சி உரம் தயாரிக்கும் அரசு கிடங்கை அகற்ற கோரியும் மீண்டும் கீழக்கரை பகுதிகளில் மதுபான கடை திறக்கக்கூடாது என்று கீழக்கரை நகர் செயலாளர் பசீர் அஹமது தலைமையில் மாணவரணி அமைப்பாளர் வழக்கறிஞர் ஹமீது சுல்தான் முன்னிலையில் ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி இணைந்து மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்தனர். உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் தொடர்பு கொண்டு குப்பை கிடங்கு உரமாக்கும் இடத்தைப்பற்றி விசாரணை செய்தார். பின்பு கீழக்கரை பகுதிக்கு மதுக்கடை வரவே வராது என்று உறுதியளித்தார்.

இதில் வர்த்தக அணி அமைப்பாளர்  மக்கள் டீம் காதர் நகர் மாவட்ட பிரதிநிதி மரிக்கா நகர தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் முகம்மது சுஐபு இளைஞரணி பயாஸ், நயிம், உடன் இருந்தார்கள்.

இந்த நிகழ்வின் போது திமுக நகர் செயலாளர் பஷீர் அகமது, மாணவரணி செயலாளர் ஹமீது சுல்தான், மாணவரணி துணைச்செயலாளர் இப்திகார் ஹசன், மக்கள் டீம் காதர்,அவைத்தலைவர் மணிகண்டன்,கெஜி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி மாநில நிர்வாகி ஷாஜகான்,மூர் ஜெய்னுதீன், தகவல் தொழில் நுட்பம் முகம்மது சுஐபு, மாவட்ட பிரதிநிதிகள் ஜபருல்லா, மரைக்கா மற்றும் பயாஸ், நைம், அக்தர், சித்திக், முத்துவாப்பா, மரஹபா சித்திக், ரியாலுதீன், யாசீன் சராஃப், 500 ப்ளாட் பகுரூதீன், கீழை அஜ்மல்கான், செல்லாப்பா, உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..