தென்காசி புதிய மாவட்டத்தின் முதல் சுதந்திர தின விழா-தேசிய கொடியேற்றி மாவட்ட ஆட்சியர் மரியாதை..

தென்காசி புதிய மாவட்டத்தின் முதல் சுதந்திர தினவிழா ஆகஸ்ட் 15 இன்று நடைபெற்றது. விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அருண் சுந்தர் தயாளன் தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.நிகழ்ச்சியில் தொடர்ந்து காவல்துறையின் மரியாதை அணிவகுப்பை ஏற்றுக்கொண்ட ஆட்சியர், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களை பாராட்டி நற்சான்றிதழ்களை வழங்கினார்.இந்த நிகழ்வில் மாவட்ட கண்காணிப்பாளர் சுகுணா சிங்,மாவட்ட வருவாய் அலுவலர் கல்பனா, மாவட்ட துணை ஆட்சியர் கோகிலா,கோட்டாட்சியர் பழனிகுமார்,டிஎஸ்பி கோகுலகிருஷ்ணன், தென்காசி எம்பி தனுஷ் எம் குமார்,தாசில்தார் ஹென்றி பீட்டர்,ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சண்முக சுந்தரம்,அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image