மதுரையில் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள்

மதுரை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் 74 வது சுதந்திர தின விழா அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது.சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிந்து 74 வது சுதந்திர தின விழாவினை மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் கொண்டாடினர்.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா மதுரை விமான நிலையத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை மைதானத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களின் சிறப்பு அணிவகுப்பு மற்றும் தேசிய கொடி ஏற்றினர்.மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமாண்டன்ட் உமாமகேஸ்வரன் தேசிய கொடியேற்றினார்.உதவி கமாண்டன்ட் சனிஸ்க் தேசிய கொடிக்கு அணிவகுப்பு மரியாதை செலுத்தினர்.சமூக இடைவெளியுடன் கூடிய முக கவசம் அணிந்த 74 வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

இந்திய திருநாட்டின் 74 ஆவது சுதந்திர தின விழா திருமலை நாயக்கர் மஹாலில் நடைபெற்றது.. மன்னர் திருமலை நாயக்கர் அரண்மனையில் தமிழக தொல்லியல் துறையின் இணை இயக்குனர் சிவானந்தம் நாட்டில் 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மூவர்ண தேசிய கொடியை ஏற்றினார் . மூவர்ணக் கொடிக்கு வீரவணக்கம் செலுத்தி வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது தேசிய கீதம் பாடப்பட்டது.

ஐ.ஏ.எஸ்.தேர்வில் வெற்றி பெற்ற பார்வையற்ற மாணவி பூரண சுந்தரி தான் படித்த மதுரை காளவாசல் பிள்ளைமார் சங்க மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தேசிய கொடி ஏற்றி பெருமிதம் கொண்டார்.இந்தியாவின் 74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுரை காளவாசல் பிள்ளைமார் சங்க மேல்நிலை பள்ளியில் பள்ளி நிர்வாக குழு செயலர் முருகன் தலைமையில் நடைபெற்ற விழாவில் ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்ற பூரண சுந்தரி தான் படித்த பள்ளியிலேயே தேசிய கொடி ஏற்றி பள்ளிக்கும் மதுரை மக்களுக்கும் பெருமை சேர்த்து தாமும் பெருமிதம் கொண்டார்.தொடர்ந்து பள்ளி வளாகத்தில் அவருக்கு மாணவ – மாணவிகள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் (திமுக) Dr.சரவணன் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.இன்று நாடு முழுவதும் 74 ஆவது சுதந்திர தின விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.,அந்த வகையில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றியத்துக்கு உட்பட்ட அவனியாபுரத்தில் காமராஜர் நகரில் அமைந்துள்ள காமராஜர் சிலைக்கு காமராஜர் குடியிருப்போர் நல சங்கத்தின் சார்பாக திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் சரவணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.,அதனைத்தொடர்ந்து 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடி கம்பத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.,இந்நிகழ்ச்சியில் காமராஜர் குடியிருப்போர் நல சங்க தலைவர் போஸ் அருள்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image