கீழக்கரை புதுகிழக்கு தெரு குப்பை கிடங்கு பிரச்சினைக்கு தீர்வு காண எம்.பி ஆய்வு..

இராமநாதபுரம் மாவட்டம்  கீழக்கரையில் 3வது வார்டுக்கு உட்பட்ட புது கிழக்குத் தெருபகுதியில் குப்பை மறுசுழற்சி உரம் தயாரிக்கும் அரசு கிடங்கை ஆய்வு செய்ய ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி மற்றும் கீழக்கரை நகர் திமுக செயலாளர் பஷீர் அகமது அப்பகுதிக்குச் சென்று பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.

அப்போது சுமார் 400க்கும் மேற்பட்ட பெண்கள் குவிந்து இப்பகுதியில் உரை உரக்கிடங்கு எங்ளுக்கு அதன்மூலம் சுற்றுப்புற சூழல் மாசு படுவதோடு அதிக நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தார்கள், எனவே எங்களுக்கு இந்த உரக்கிடங்கு தேவை இல்லை எங்களுக்கு சிறுவர் பூங்கா மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டித்தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து நவாஸ்கனி எம்பி சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு இப்பகுதியில் விளையாட்டு மைதானம் அல்லது சிறுவர் பூங்கா ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். உடன் திமுக நிர்வாகிகளும் முஸ்லிம்லீக் நிர்வாகிகளும் கலந்து கொண்டார்கள்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..