நியாயவிலை கடைகளில் தரமான உணவுப் பொருட்களை வழங்க கோரி அனைத்திந்திய மாதர் சங்கத்தினர் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு_

மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பாக அளிக்கப்பட்ட மனுவில்,அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள நியாய விலை கடையில் ஆய்வு செய்யப்பட்டது.,கொரோனவைரஸ் தாக்குதல் காரணமாக நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கால் பொதுப் போக்குவரத்து உட்பட மக்களின் வேலைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது வருமானம் இல்லாமல் வாழ்வாதாரம் மிகவும் பின்தங்கிவிட்டது.இந்நிலையில் நியாயவிலை கடைகளில் அதிகம் உணவுப் பொருட்கள் தங்கு தடையில்லாமல் வழங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.,ஆனால் ஒரு சில கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

எனவே நியாயவிலைக் கடைகளில் பொருட்களின் அளவு குறையாமல் சுத்தமாகவும் வழங்க வேண்டும் 2020 டிசம்பர் வரை பொருட்கள் விலை அல்லாமல் வழங்க வேண்டும், ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கு ஆதார் அட்டையை பயன்படுத்தி ரேஷனில் பொருட்கள் வழங்க வேண்டும் முகக்கவசம் அணிய வேண்டும் பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க வேண்டும் கண்காணிக்க வேண்டும் மத்திய நிதி அமைச்சர் அறிவித்த சுண்டல் கடலை இதுவரை வழங்கப்படவில்லை அதை வழங்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனுவில் கூறப்பட்டிருந்தது .

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image