செங்கம் அருகே நாட்டு துப்பாக்கியுடன் வலம் வந்த மர்ம நபர் தப்பியோட்டம்! போலீசார் தீவிர விசாரனை

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தாழையுத்து பகுதியில் வாகன சோதனையின்போது நாட்டுத்துப்பாக்கி வலம் வந்த மர்ம நபர் தப்பி ஓட்டம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.செங்கம் அடுத்த தாழையூத்து அருகே காவல் ஆய்வாளர் சாலமோன் ராஜா தலைமையிலான காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்போது அவ்வழியாக வந்த இரண்டு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ய முயன்றனர். அப்போது பாதி வழியிலேயே வண்டியை நிறுத்திவிட்டு இரண்டு சக்கர வாகனம் ஓட்டி வந்த மர்ம நபர் தப்பி ஓட்டம். உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கி இரண்டு சக்கர வாகனத்தில் இருந்ததை கண்டு காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்கள் பறிமுதல் செய்தனர். நேரத்தில் உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கியுடன் வலம்வந்த நபர் யார் என தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர் மேலும் உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கி இரண்டு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

செய்தியாளர் செங்கம் சரவணக்குமார்

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image