நிலக்கோட்டை அருகே மேற்படிப்புக்கு பணம் கட்ட வசதி இல்லாத விரக்தியில் கல்லூரி மாணவன் தற்கொலை

ிண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள விளாம்பட்டி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பரமேஸ்வரனின் மகன் நிவாஸ்  24. இவர் எம். பி. ஏ. பட்டிவீரன்பட்டி அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் படிப்பதற்காக பல்வேறு இடங்களில் ஏற்கனவே கடன் வாங்கியும், ஆங்காங்கே கிடைக்கும் கூலி வேலைக்கும் சென்று கல்லூரிக்கு தேவையான கல்லூரி கட்டணத்தை தானாக கட்டி படித்து வந்ததாக கூறப்படுகிறது. இன்னும் மேற்படிப்பு படிக்க வேண்டும் என்று ஆசை இருந்ததாகவும் மனதில் வைத்து அவ்வப்போது புலம்பி வந்ததாக கூறப்படுகிறது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நிவாஸ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து அவரது தந்தை பாண்டீஸ்வரன் விளாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேஸ்வரிடம் கொடுத்த புகாரின்படி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். கல்லூரி மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கிராமத்தை சோகத்தில் மூழ்கியுள்ளது.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image