கீழக்கரையில் தவ்ஹீத் ஜமாத் சார்பாக இரத்த தான முகாம்..

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமையின் வழிக்காட்டுதலின் படி வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி இந்தியாவின் 74-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த மாதம் முழுவதும் தமிழகத்திலுள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அனைத்து மாவட்ட நிர்வாகங்களின் சார்பில் கொரோனா பேரிடர் கால இரத்ததான முகாம்கள் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி சனிக்கிழமையன்று தமிழகம் முழுவதும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பில் 100-க்கும் மேற்பட்ட சிறப்பு இரத்ததான முகாம்கள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த முகாம்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு இரத்ததானம் அளிக்க இருக்கின்றார்கள்.

இதன் ஒருகட்டமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் தெற்கு மாவட்டம் கீழக்கரை 500பிளாட் கிளை சர்பாக 20 வது முகாமை மாவட்ட தலைவர் முகம்மது அயூப்கான் தலைமையில் இன்று(13/08/2020) இரத்ததான முகாம் ஏற்பாடுகள் செய்யபட்டு, மாவட்ட செயலாளர் J.M.ஆரிப்கான் மற்றும் கீழக்கரை ஐந்து கிளை நிர்வாகிகள் முன்னிலையில், காவல்துறை உதவி கன்கானிப்பாளர் K.முருகேசன் DSP முகாமை துவங்கி வைத்தார்.

இதில் 30 இரத்த கொடையாளர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு இரத்ததை தானமாக வழங்கினார்கள்.

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image