தீடீரென தீப்பற்றிய சாலையில் சென்ற கார்..

சிவகங்கையை சேர்ந்த ராஜசேகரன் இவருக்கு சொந்தமான ஹூண்டாய் I .10 காரில் காளவாசலில் இருந்து புது ஜெயில் ரோடு வழியாக வந்து கொண்டிருந்த பொழுது கரிமேடு மீன் மார்க்கெட் அருகே வரும்போது காரின் முன் பகுதியில் திடீரென புகை வந்து காரை  மளமளவென எரிய ஆரம்பித்தது.

உடனடியாக மதுரை டவுன் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த மதுரை டவுன் நி்லைய தீயணைப்பு குழுவினர் விரைந்து சென்று எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். விசாரணையில் பேட்டரியில் ஏற்பட்ட பழுது காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரியவருகிறது. இதுகுறித்து கரிமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். பரபரப்பான சாலையில் கார் தீ பற்றியது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image