மூணாறு நிலச்சரிவு எதிரொலி கேரளா – போடி மெட்டு வாகன சோதனைச்சாவடியில் டிஐஜி ஆய்வு.

கேரளா மாநிலம் மூணாறு அருகே ராஜமலை – பெட்டிமுடி பகுதியில் தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 78 குடும்பத்தினர் அங்குள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் தங்கி வேலை பார்த்து வந்தனர்.இந்த நிலையில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததால் இடுக்கி மாவட்டம் முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக ஆகஸ்ட் 6ஆம் தேதி பெய்த கனமழைக்கு தேயிலை தோட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு 40க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். தற்போதும் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.இந்த தகவலை அறிந்த திண்டுக்கல் சரக டிஐஜி முத்துச்சாமி திடீரென்று தேனி மாவட்டம் கேரளா – மூணாறு எல்லையில் உள்ள போடி மெட்டு வாகன சோதனை சாவடியை ஆய்வுப் பணியை மேற்கொண்டார்.மேலும் இடுக்கி மாவட்ட காவல் துறை டிஐஜியிடம் தொடர்பு கொண்டு மூணாறு நிலச்சரிவு குறித்த விபரங்களையும், வேறு உதவி ஏதும் தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார். மேலும் போடி மெட்டு பகுதி மக்களுக்கும் கேரளா செக்போஸ்ட் பகுதியில் உள்ள வர்களுக்கும் கொரோனா விழிப்புணர்வு மற்றும் இலவச முகக் கவசங்களை வழங்கினார்.

பின்னர் மூணாறு சம்பவம் போன்று தேனி மாவட்டத்தில் நடைபெறாமல் இருப்பதற்காக போடி மெட்டு சாலையில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை குறித்தும், சாலைகளில் நிலச்சரிவு ஏதும் ஏற்படும் சூழல் நிலவுகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்தார்.தொடர்ந்து குரங்கணி காவல் நிலையம் சென்று அப்பகுதி மலையில் வாழும் பொதுமக்களின் நிலைபாட்டை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி,போடி துணை காவல் கண்காணிப்பாளர் பார்த்திபன் ஆகியோர் உடன் இருந்தனர்.

சாதிக்பாட்சா நிருபர் தேனி மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..