துணை முதல்வர் மாவட்டத்தில் சிறப்பு கொரோனா அதிகாரியை காணவில்லை சிபிஎம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக மாவட்டம் தோறும் சிறப்பு அதிகாரிகளை தமிழக அரசு நியமனம் செய்துள்ளது. அதனடிப்படையில் தேனி மாவட்டத்திற்கு கொரோனா சிறப்பு அதிகாரியாக கார்த்தி கேயன் ஐஏஎஸ் என்பவரை நியமனம் செய்தனர்.ஆனால் மாவட்டத்தில் கொரோனா தாக்கம் நாள்தோறும் அதிகரித்து வருவது மட்டுமின்றி இறப்புகளும் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் மாவட்டத்திற்கு என்று நியமிக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி கார்த்திகேயன் என்பவரை காணவில்லை என்றும் தொற்றால் நாள்தோறும் இறப்பு விகிதம் கட்டுப்படுத்த முடியாத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் மத்திய அரசு தமிழக அரசுக்கு உடனடியாக கொரோனா நிவாரண நிதியை வழங்க வேண்டும் என்றும் தேனி மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க உரிய நிதி வழங்கிடக் கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகன் ஒன்றிய செயலாளர் சடையாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

சாதிக்பாட்சா. நிருபர் தேனி மாவட்டம்

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image