தி.மலை மண்டல அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற சாரண மாணவர்களுக்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் பாராட்டு.

திருவண்ணாமலை மண்டல அளவிலான சுதந்திர தின விழா போட்டிகளில் வெற்றி பெற்ற செங்கம் கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று சாரண மாணவர்களை மண்டல ஒருங்கிணைப்பாளர் பியூலா கரோலின் பாராட்டு தெரிவித்தார்.தமிழ்நாடு பாரத சாரண சாரணியர் இயக்கம் சார்பில் 73வது சுதந்திர தின போட்டிகள் காணொளி மூலம் நடைபெற்றது இவற்றில் தி.மலை மண்டல அளவில் செங்கம் கல்வி
மாவட்டத்தை சேர்ந்த தரடாபட்டு அரசு உயர்நிலைப்பள்ளி சாரணிய மாணவர்கள் ருக்குமணி , ரேணுகா ஸ்ரீ, மற்றும் எஸ்கே வி பள்ளி மாணவர் லிங்கேஸ்வரன் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டியில் தகுதி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை திருவண்ணாமலை மண்டல ஒருங்கிணைப்பாளர் பியூலா கரோலின் பாராட்டு தெரிவித்தார். நிகழ்வின் போது, செங்கம் கல்வி மாவட்ட செயலாளர் வெங்கடேஷ் மற்றும் போளூர் மாவட்ட செயலாளர் தட்சிணாமூர்த்தி உடன் இருந்தனர்.

செய்தியாளர் செங்கம் சரவணகுமார்

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image