புதுப்பாளையத்தில் மாற்றுக் கட்சியினர் அமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையத்தில் திமுக காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த 2000 பேர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளருமான பன்னீர்செல்வம் ஏற்பாட்டில் அதிமுகவில் இணைந்தனர். அதிமுக அமைப்பு செயலாளரும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான சேவூர் ராமச்சந்திரன் புதியதாக கட்சியில் சேர்ந்தவர்களுக்கு அதிமுக கட்சி வேட்டி அளித்து வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் மாநில வழக்கறிஞர் அணி இணை செயலாளர் பாபுமுருகவேல், முன்னாள் எம்.எல்.எ நளினி மனோகரன், ஒன்றிய செயலாளர்கள் புருஷோத்தமன், திருநாவுக்கரசு பொதுக்குழு உறுப்பினர் பொய்யாமொழி துரை ஆவின் பாரிபாபு இலக்கிய அணி மகேந்திரன் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image