செங்கம் தொகுதியில் தேர்வு செய்யப்பட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளர்கள் பட்டியல் பெறுதல் நிகழ்வு.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதிக்குட்பட்ட தண்டராம்பட்டு ஒன்றியத்தில் திமுக இளைஞர் அணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.தேர்வு செய்யப்பட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளர்,துணை அமைப்பாளர்கள் பட்டியல் படிவம் பெறுதல் நிகழ்வு நடைபெற்றது.திமுக இளைஞர்அணி செயலாளர் உதயநிதி_ஸ்டாலின் ஆணைகினங்க,மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, அவர்களின் வழிகாட்டுதலுடன், செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி முன்னிலையில்,மாவட்ட இளைஞரணி அமைப்பாளர், தி.மலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை செங்கம் தொகுதிக்குட்பட்ட தண்டராம்பட்டு மேற்கு ஒன்றியத்தில் உள்ள ஊராட்சியில் இளைஞரணி நிர்வாகிகளுக்கான படிவங்களை பெற்றுக்கொண்டார். உடன் ஒன்றிய செயலாளர், பன்னீர்செல்வம்பொதுக்குழு உறுப்பினர் தண்டபாணி,மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர், பொன்_தனுசு,மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் முத்துமாறன்மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சத்யா வெங்கடேஷ்,
மாவட்ட வழக்கறிஞர் அணி து.அமைப்பாளர் கதிரவன் ,மாவட்ட மருத்துவரணி து.அமைப்பாளர் கலையரசு,ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வசந்த்குமார்,துணை அமைப்பாளர்கள் வெங்கடேசன் , சுந்தர் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், பல்வேறு அணிகளுடைய அமைப்பாளர்கள் & துணை அமைப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

செய்தியாளர் செங்கம் சரவணகுமார்

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image