நிலக்கோட்டை அருகே 80 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணி தீவிரம்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட காமாட்சிபுரம் , எம் . புதுப்பட்டி ஆகிய 2 கிராமங்களை உள்ளடக்கி இணைப்பு சாலைகள் அமைக்க வேண்டும் என்று கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதி கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்த வண்ணம் இருந்தனர். இந்த சாலையை அமைப்பதற்காக பல்வேறு பொது மக்களின் தமிழக முதல்வர் சிறப்பு திட்டமான தமிழக அரசின் ஊரக வளர்ச்சி நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் மூலம் 80 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

இப்பணியை நிலக்கோட்டை பேரூராட்சி செயல் அலுவலர் கலையரசி தலைமையில் அதிகாரிகள் மேற்பார்வை செய்தனர். மேற்பார்வையில் உதவி பொறியாளர் ஜெயகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார், திட்ட மேற்பார்வையாளர் ஆனந்தன், சுகாதார மேற்பார்வையாளர் கல்யாணி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் உட்பட பலர் இருந்தனர். இக்கிராம மக்கள் 50 ஆண்டுகளுக்குப் பின்பு ஒருங்கிணைந்த சாலைகள் அமைப்பது பார்த்து மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..