மதுரை தற்போது கொரோனோவிலிருந்து பாதுகாப்பாக உள்ளது-அமைச்சர் ஆர்.பி.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பத்திரிக்கையாளர் சந்திந்தார்..கொரோனோ சிறப்பு நிதியாக தமிழகத்திற்கு 9 ஆயிரம் கோடி ரூபாய்2 மத்திய அரசிடம் கோரப்பட்டுள்ளது.நாள்தோறும் 65 ஆயிரம் பேருக்கு கொரோனோ பரிசோதனை செய்யப்படும் நிலையில் பரிசோதனைக்காக நாள்தோறும் 5 கோடி ரூபாய் செல்வாகிறது.தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட கூடுதலாக 56 சதவீதம் கிடைத்துள்ளது.கொரோனோ பாதிப்பிலிருந்து மதுரை மக்களை மதுரை மாவட்ட நிர்வாகமும் மாநகராட்சி நிர்வாகவும் மீட்டெடுத்துள்ளது.மதுரை தற்போது கொரோனோவிலிருந்து பாதுகாப்பாக உள்ளது.தேவையான தளர்வுகளை தொடர்ந்து தமிழக அரசு வழங்கி வருகிறது.எம்ஜிஆர் இருக்கும் வரை மக்கள் வேறு யாருக்கும் தீர்ப்பளிக்கவில்லை.இந்தியாவில் 3 வது மாபெரும் இயக்கமாக மாற்றியவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுக அரசு நிற்குமா நிலைக்குமா என்ற நிலையில் எளிமையின் அடையாளமாக திகழும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக அரசு வலிமையான அரசு என்பதை நிரூபித்து காட்டியுள்ளார்முதல்வருக்கு துணையாக துணை முதல்வரும் மூத்த அமைச்சர்களும் அயராது துணை நிற்கிறார்கள்.கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நடைபெற்ற மினி பொது தேர்தலில் (இடைத்தேர்தல்) முதல்வராக எடப்பாடி பழனிச்சாமியும் துணை முதல்வராக பன்னீர்செல்வத்தையும் முன்னிறுத்தி தேர்தல் களத்தை சந்தித்து மாபெரும் வெற்றி பெற்றுள்ளோம், இந்த ஒற்றுமையைத்தான் மக்கள் விரும்புகிறார்கள்.கடந்த மூன்றரை ஆண்டுகளில் கூட்டுறவு தேர்தல், உள்ளாட்சி தேர்தல், நாடாளுமன்ற தேர்லில் பெற்ற வெற்றி பயணத்தை மக்கள் விரும்புகிறார்கள்.அதே பயணத்தை ஒற்றுமையோடு தொடர வேண்டும்.எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் வேட்பாளராக ஆதரிப்போம் என்ற அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கருத்தைத்தான் ஒன்றரைக்கோடி தொண்டர்களின் கருத்தாக உள்ளது.. என்று கூறினார்.

.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image