முத்தனூர் கிராமத்தில் எட்டு வழி சாலை எதிர்ப்பு இயக்க விவசாயிகள் போராட்டம்!

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த முத்தனூர் கிராமத்தில் எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்க விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.எட்டு வழி சாலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் அருள் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில்எட்டு வழிச்சாலைக்கு எதிரான வழக்கில் சுற்றுப்புற சூழல் அனுமதி தேவையில்லை என்று மனு தாக்கல் செய்துள்ள மத்திய அரசை கண்டித்தும். எட்டு வழிச்சாலை திட்டத்தை கைவிட கோரியும், இந்திய நாட்டையே பாலைவனம் ஆக்க கொண்டுவரும் (EIA2020)சுற்று சூழல் தாக்க மதிப்பீட்டு 2020 சட்டத்தை வாபஸ் பெற கோரியும்,எட்டு வழிச்சாலையை அச்சாரமாக வைத்து ராணுவ தளவாட உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு 2020 வரைவு திட்டத்தை வாபஸ் வாங்க கோரி போராட்டத்தில் முழக்கமிட்டனர். 50 க்கும் மேற்பட்ட விவசாயிகள் சமூக இடைவெளியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செய்தியாளர் செங்கம் சரவணகுமார்

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image