இராமநாதபுரத்தில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை மற்றும் EIA 2020 போன்ற கருப்புச் சட்டங்களை திரும்ப பெறக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..

இராமநாதபுரத்தில் இன்று (11/08/2020) பாரதி நகரில் பகல் 11 மணி அளவில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை மற்றும் EIA2020 போன்ற கருப்புச் சட்டங்களை திரும்ப பெறக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் பெரியார் பேரவைத் தலைவர் நாகேசுவரன் தலைமையில் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் தோழர் எஸ். முருகபூபதி , திமுக மாவட்ட தொழில் நுட்ப பிரிவு செயலாளர் கே.ஜே. பிரவீன், வீரகுல தமிழர் படையின் தலைவர் கீழை பிரபாகரன், எஸ்டிபிஐ கட்சியின் தொகுதி செயலாளர் அப்துல் ஜமீல், ஆதித்தமிழர் கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் க.பாஸ்கரன், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாவட்ட தலைவர் முகமது மன்சூர், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் நகர தலைவர் அப்துல் ரஹீம், பெரியார் பேரவையின் மாவட்ட அமைப்பாளர் தோழர் செய்யது சேக் அப்துல்லா போன்ற தோழர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்குபெற்றனர் முடிவில் ஆதித் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் தோழர் இரணியன் அவர்கள் நன்றி கூறினார்.

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image