எழுமலை அருகே 4000 ஆண்டு பழமையான கற்குழிகள் இரும்பு உலை உள்ள இடங்களில் விரிவான ஆய்வு நடத்த வேண்டுமென கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் சமீபகாலமாக பல்வேறு தொல்லியல் எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக எழுமலை அருகே பாறைப்பட்டி எனும் கிராமத்தின் அருகே மலை அடிவார குகையில் பழமையான கற்குழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதுஇ பல்வேறு நாடுகளின் காணப்படும் இந்த கற்குழிகள் தற்போது இந்த மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியிலும் காணப்படுகிறதுஇ சுமார் 3000 முதல் 4000 ஆண்டுகள் பழமையானதாக இருக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.மேலும் இந்த பகுதியின் அருகே இரும்பு உலை இருந்தற்கான சான்றுகளாக இரும்பு எச்சங்கள் அதிகளவில் காணப்படுகிறது கற்கால ஆயுதங்கள் சங்ககால ஆயுதங்கள் இரும்பு ஆயுதங்கள் இரும்பு துகள்கள் சுண்ணாம்பு குவியல்கள முதுமக்கள் தாழிகள் என பல்வேறு வகையான தொல்லியல் எச்சங்களை கிராமமக்கள் கண்டுபிடித்தனர்

.இதனை தொல்லியல்துறை அதிகாரி காந்திராஜன் தலைமையிலான குழுவினரும் உறுதி செய்தனர்.இந்நிலையில் பாறைப்பட்டி கிராமத்தில் விரிவான ஆய்வு நடத்த வேண்டுமென உசிலம்பட்டி வருவாய் கோட்டாச்சியரிடம் இக்கிராம மக்கள் மனு அளித்தனர்.இதனையடுத்து உசிலம்பட்டி வருவாய் கோட்டாச்சியர் ராஜ்குமார்; பாறைப்பட்டி கிராம மலைப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.இது குறித்து விரிவான ஆய்வு நடத்த அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என கிராமமக்களிடம் உறுதி அளித்தார்.

உசிலை சிந்தனியா

புனித ரமலான் வாழ்த்துக்கள்..