பெரியகுளத்தில் ஊழல் செய்த ரேஷன் கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரையில் வக்கீல் நாயுடு தெருவில் தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் நகர பொதுச்செயலாளராக துரை என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த ஜூலை மாதம் 10ஆம் தேதி அன்று பெரியகுளம் நகர கூட்டுறவு பண்டகசாலை உட்பட்ட நியாயவிலை கடை எண்.1,3,4,14 ஆகிய கடைகளில் அரசு வழங்கும் இலவச பொருட்களை எடை குறைவாகவும் தரமற்ற உணவுப் பொருட்களை வழங்குவதாகவும் மேலும் அரசு நிர்ணயித்த விலையை விட, கூடுதலான விலைக்கு மளிகை பொருட்களை கட்டாயப்படுத்தி குடும்ப அட்டைதாரர்கள் விற்பனை செய்வதை கண்டித்துள்ளார். இது சம்பந்தமாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. மேலும் இது சம்பந்தமாக வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ஆனால் ரேஷன் கடை ஊழியர்கள், துரை என்பவர் தங்களை அரசு பணி செய்ய விடாமல் தடுப்பதாகவும் எங்களை மிரட்டுகிறார் என்று
பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர். இது சம்பந்தமாக போலீசார் அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் மற்றும் கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளில் துரை என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இச்சம்பவத்தை போலீசார் விசாரணை செய்யாமல் ஒருதலைப்பட்சமாக எனது கட்சி நிர்வாகி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதை கண்டித்து, தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு மாவட்ட தென்னிந்திய பார்வர்டு பிளாக் மாவட்ட பொதுச்செயலாளர் முருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பொய் வழக்கை வாபஸ் பெறவேண்டும். சம்பந்தப்பட்ட ரேஷன் கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எஸ்பியிடம் மனு அளித்தனர். மேலும் நடவடிக்கை எடுக்க மறுத்தால் வருகின்ற புதன் கிழமை மாநிலம் தழுவிய போராட்டம் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தனர்.

சாதிக்பாட்சா. நிருபர் தேனி மாவட்டம்

All Your Home Needs @ One Place

All Your Home Needs @ One Place

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image