பழுதடைந்த மின் கம்பங்களை அகற்றி புதிய மின் கம்பத்தில் மின் இணைப்பு கொடுக்க கோரிக்கை.

இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலத்தில் மின்கம்பங்கள் பல இடங்களில் மிகவும் சேதமடைந்து,எந்த நேரத்திலும் கீழே விழும்அபாயத்தில் உள்ளது. பழதடைந்த மின் கம்பங்களுக்கு அருகில் புதிய மின் கம்பங்கள் நடப்பட்டு நீண்ட நாட்களாக மின் இணைப்பு ஏதும் கொடுக்கப்படாமல் உள்ளது. பொதுமக்கள் அதிகம் வந்து போகும் பிரதான சாலை,மாணவர்கள் கல்வி பயிலும் மழழையர் பள்ளிக்கூடம் மற்றும் வாகனங்கள் அதிகம் கடந்து செல்லும் பாதை என்பதால் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பாக முன்னெச்சரிக்கையாக கீழே குறிப்பிட்ட 3 இடங்களிலும்

இடம் : 1
ஆர்.எஸ். மங்கலம், டி.டி மெயின் ரோடு அலிசா மியூசிக்கல்ஸ் அருகில்

இடம் : 2
ஆர்.எஸ். மங்கலம், அலிகார் சாலை பிரிட்டோ ஸ்கூல் அருகில்

இடம் : 3
ஆர்.எஸ். மங்கலம் வள்ளுவர் தெரு, பிரியா ஸ்டுடியோ அருகில்

மிக விரைவில் பழுதான மின்கம்பங்களை அகற்றி அருகில் உள்ள புதிய மின் கம்பத்தில் மின் இணைப்புகளை மாற்றித் தருமாறு இராஜசிங்கமங்கலம் இளைஞர் மஸ்ஜித் சேவை குழுசார்பாக ஆர்.எஸ்.மங்கலம் உதவிமின் பொறியாளர் இன்று அலுவலகத்தில் இல்லாததால் SPECIAL FOREMAN செல்வராஜ் அவர்களிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image