சூதாட்டத்தில் ஈடுபட்ட 30 பேர் சுற்றி வளைப்பு;செல்போன் கார் பறிமுதல்-நெல்லை மாநகர காவல்துறை அதிரடி நடவடிக்கை…

நெல்லையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 30 பேரை அதிரடியாக நெல்லை மாநகர காவல் துறை சுற்றி வளைத்தனர்.நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை, சாந்திநகர் ரஹ்மத் நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சூதாட்டம் நடைபெறுவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

நெல்லை மாநகர காவல் ஆணையாளர் தீபக் மோ.டாமோர் இ.கா.ப உத்தரவின் பேரில், உதவி ஆணையாளர் சதீஷ்குமார் தலைமையில், பாளையங்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் சோமசுந்தரம் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, சூதாட்டத்தில் ஈடுபட்ட 30 பேரை சுற்றி வளைத்து, சூதாட்டத்திற்கு பயன்படுத்திய பணம் ரூ.4,58,800/-, 22 மோட்டார் சைக்கிள்கள், Zylo கார், மற்றும் 26 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.இந்த சூதாட்ட சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image