மதுரை வெள்ளக்கல் மாநகராட்சி குப்பை கிடங்கில் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுகிறதா என்று திருப்பரங்குன்றம் திமுக சட்டமன்ற உறுப்பினர் நேரில் ஆய்வு

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வெள்ளக்கல் பகுதியில் மதுரை மாநகராட்சி குப்பை கிடங்கு உள்ளது.இங்கு உள்ள குப்பை கிடங்குகளில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுகிறதா என என்று திமுக சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சரவணன் ஆய்வு செய்தார்.கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தமிழகத்தில் மருத்துவ கழிவுகள் எவ்வாறு அகற்றப்படுகிறது என்பதை பற்றி விளக்கம் அளிக்க தன்னார்வ வழக்கு தொடர்ந்தது.,மதுரை உயர் நீதிமன்ற கிளை மேற்பார்வையின் கீழ் ஆய்வு செய்வதற்காக உறுப்பினர்களை நியமித்து உள்ளது.அதில் திமுகவை சேர்ந்த திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் Dr. சரவணன் குழுவில் உள்ளார்.,இந்நிலையில் ஆய்வு செய்வதற்காக மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றியத்துக்கு உட்பட்ட அவனியாபுரம் அருகே வெள்ளக்கல் மதுரை மாநகராட்சி குப்பை கிடங்கில் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுகிறதா? என்பதையும் என்ன மாதிரியான பணிகள், ஊழியர்களுக்கான பாதுகாப்பு ஏற்பட்டுள் ஆகியவை குறித்து ஆய்வு செய்வதற்காக வருகை தந்த சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் சரவணன் மாநகராட்சி குப்பை கிடங்கை ஆய்வு செய்தார். தொடர்ந்து பணியாளர்கள் முக கவசம் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் போட்டு வேலை செய்கிறார்களா? என்பதையும் ஆய்வு செய்தார்.,

இதில் மாநகராட்சி குப்பை கிடங்கின் செயற்பொறியாளர் சேகர். உதவி பொரியாளர் செல்வநாயகம் ஆகியோர் அங்கு நடைபெறும் பணிகள் குறித்து விளக்கினர்.தொடர்ந்து செய்தியாளருக்கு பேட்டி அளித்த சட்டமன்ற உறுப்பினர் சரவணன்,சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தமிழகத்தில் மருத்துவ கழிவுகள் ஏதும் கொட்டப்படுகிறதா? அதனால் ஏதும் பாதிப்பு ஏற்படுகிறது என்பது குறித்து விளக்கம் அளிக்க தன்னார்வமாக வழக்கு ஒன்று தொடர்ந்தது. அதில் என்னையும் உறுப்பினராக சேர்த்துள்ளது.,அந்த வகையில் ஆய்வு செய்வதற்காக மதுரை வெள்ளக்கல் மாநகராட்சி குப்பை கிடங்கில் மருத்துவ கழிவுகள் எதுவும் கொட்டப்படுகிறதா என்பதை குறித்து இங்குள்ள அரசு அதிகாரிகள் களிடம் ஆய்வு செய்தேன்.,ஆனால் அந்த மாதிரி ஏதும் இங்கே இல்லை மருத்துவ கழிவுகள் எதுவும் எட்டப்படவில்லை மக்கும் குப்பைகள் மக்காத குப்பைகள் என்று தரம் பிரித்து கொட்டப்படுகிறது மேலும் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் இருந்து குப்பைகள் மட்டும்தான் கொட்டப்படுகிறது என்று கூறினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image