மூதாட்டி கொலை வழக்கில் திருப்பம். வறுமையால் மூதாட்டியை குடும்பமே கொன்றது அம்பலம்.. மகள் பேரன் பேத்தி உட்பட 4 பேர் கைது,,

மதுரை மாவட்டம் திருமங்கலம் குண்டற்றில் நேற்று முன்தினம் எரிந்து கொண்டிருந்த நிலையில் 75 வயது மூதாட்டி உடல் மீட்டனர் இதுதொடர்பாக திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இது குறித்து போலீஸார் கூறும்போது… விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்த விஜயகரிசல்குளம் தைச் சேர்ந்த கருப்பாயி வயது 75 .இவரது கணவர் இறந்தபின் கருப்பாயி தன் குடும்பத்துடன் திருமங்கலத்தில் கடந்த 20 முன் குடியேறிவிட்டார். இரண்டாவது மகள் பழனியம்மாள் வயது 52. பூ கட்டும் தொழில் செய்துவருகிறார் .பழனி அம்பாளுக்கு வைர மணி வயது 33 காளீஸ்வரி 27 என்ற மகள்களும் காளிதாஸ் வயது 30 என்ற மகனும் வைரமணி என் கணவரும் இவர்களுடன் உள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மூதாட்டி கருப்பாயி முதுமை காரணமாக நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாய் இருந்து வந்தார், தற்பொழுது.கொரோனா காரணமாக இவர்களுக்கு வேலை இல்லை. இதனால் குடும்பமே வறுமை நிலை ஏற்பட்டது. இதனால் மூதாட்டிக்கு உரிய சிகிச்சை அளிக்க முடியவில்லை குடியிருந்த வீட்டுக்கு வாடகை கொடுக்க முடியாததால் வீட்டின் உரிமையாளர் காலி செய்யக் கூறினார். கடந்த சில நாட்களாக பழனியம்மாள் குடும்பத்தினர் வேறு வீடு பார்த்து வந்தனர். வேறு வீட்டுக்கு சென்றாலும் மூதாட்டி கருப்பாயி கவனிப்பதில் ஏற்படும் சிரமங்கள் இருப்பதால் அவரை கொலை செய்து விடலாம் என குடும்பத்தினர் முடிவு செய்தனர்.. இதன்படி மகள் பழனியம்மாள் பேரன் காளிதாஸ் பேத்தி காளீஸ்வரி மருமகன் வசந்தகுமார் ஆகியோர் தலையை அழுத்தி கொன்று பின் பெட்ரோல் ஊற்றி குண்டாற்றில் வைத்து பெட்ரோல் ஊத்தி எரித்தது தெரியவந்தது .நேற்றிரவு பழனியம்மாள் காளீஸ்வரி காளிதாஸ் வசந்தகுமார்,,,, திருமங்கலம் நகர காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image