கொரோனா தயவால் பணத்தில் புரளும் தனியார் மருத்துவமனை…அதிகமில்லை 11 நாளுக்கு 6.50 லட்சம்…

கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்தும் வரும் நிலையில் தற்போது வரை அதற்கான தடுப்பு மருந்துகளோ, தடுப்பூசிகளோ கண்டுபிடிக்காத நிலையில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க தமிழக அரசு சில தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி அளித்துள்ளதால் தினமும் கோடிக்கணாக்கான வருவாய் பார்த்து வருகிறார்கள் என்றால் மிகையாகாது.

அதற்கு மதுரையில் 11 நாள் கொரோனா சிகிச்சைக்கு 6.50லட்சம் வரை வசூலித்துள்றனர்.  கொரோனாவின் விபரீதம் உயிரிழப்பு என்பதால் நோயாளிகளும் தேவையான பணத்தை தயக்கமின்றி கொடுத்துவருவதால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் மனம் போல் கட்டணத்தை வசூல் செய்து விடுகின்றனர்.

மதுரை பைக்காரா பகுதியில் உள்ள பிரபல (லெட்சுமணா) தனியார் மருத்துவமனையில் நேமிசந்த் என்பவர் கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் கடந்த ஜூலை மாதம் 3ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,  14ஆம் தேதி தொற்று குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார்.

அப்போது நோயாளியிடம் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் கொடுக்கப்பட்ட டிஸ்சார்ஜ் பில் நோயாளியின் உறவினர்களை மயக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த பில்லில்  பதிவு கட்டணமாக 2ஆயிரம் என தொடங்கி அறை வாடகை நாளொன்றுக்கு தலா 5ஆயிரம் வீதம் 12நாட்களுக்கு 60ஆயிரம், (300ரூபாய் மதிப்பு இருக்ககூடிய) PPEகிட் ஒன்றிக்கு தலா 2ஆயிரம் என 96கிட் பயன்படுத்தியதாக 1லட்சத்தி 92ஆயிரம், என்வென்றே கணிக்க முடியாத இன்வெஸ்டிகேஷன் செலவு என தனியாக 24ஆயிரம் ரூபாய், மருந்து மாத்திரைகளுக்கான செலவாக 78ஆயிரம், ஹவுஸ்கீப்பிங்கிற்கு 42ஆயிரம் என ஒட்டுமொத்தமாக 6லட்சத்தி 3ஆயிரத்தி 500 ரூபாய் வசூல் செய்துள்ளனர்.

இந்த பில் தற்போது சமுகவலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.  அதில் PPE வீட்டிற்கு 2ஆயிரம் எனவும், மருந்துக்கு 78ஆயிரம் என திகைப்புடன் சமூக வலைதளவாசிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பிவருகின்றனர். மருந்தே கண்டறியாத கொரோனா தொற்றிற்கு சிகிச்சை அளிப்பதாக நாளொன்றுக்கு 50ஆயிரம் என 6லட்சம் வசூல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாக தரப்பில் நம்மிடம் கூறியபோது மருத்துவர்கள் உயிரை பணயம் வைத்து சிகிச்சை அளிக்கின்றனர் மருந்துகளும் தற்போது நேரடியாக கிடைக்காமல் மூன்றாம் தரப்பில் மருந்துகளை வாங்கி சிகிச்சை அளித்து வருகிறோம். மேலும் நோயாளிகளின் தன்மை மற்றும் அவர்கள் மருத்துவமனையில் தங்கிய நாட்களைப் பொருத்து பணம் கூடுதலாக நோயாளிகளுக்கு செலவாகிறது என எந்த பொறுப்பும் இல்லாமல் பதில் கூறி தொலைபேசியை துண்டித்தனர்.  இந்த விசயத்தில் அரசாங்க அதிகாரிகளும், மாவட்ட ஆட்சியரும் தலையிட்டு நடுத்தர மக்களை இந்த மருத்துவ கொள்ளையர்களிடமிருந்து காப்பாற்ற வேண்டும்.

செய்தியாளர் .வி காளமேகம் மதுரை மாவட்டம்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..