கொலை நடந்து 5 மணி நேரத்தில் குற்றவாளிகளை பிடித்த காவல்துறை…..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள சின்ன மாயாகுளம் கிராமத்தைச் சேர்ந்த எடிசன் 23 என்பவரை முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரி எதிரே உள்ள கருவை காட்டில் வைத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மாவட்ட கண்காணிப்பாளர் வருண் குமார் IPS உத்தரவின் படி கீழக்கரை துணை கண்காணிப்பாளர் முருகேசன் தலைமையிலான குற்றப்பிரிவு போலீசார் சின்ன மாயா குளத்தைச் சேர்ந்த கோபிநாத் மற்றும் தேவகுமார் ஆகிய இரு குற்றவாளிகளை 5 மணி நேரத்தில் கைது செய்தனர். விசாரணைகள் குடும்ப தகராறு காரணமாக இருவரும் சேர்ந்து மது போதையில் இருந்த எடிசனை கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்தனர்.

கீழை நியூஸ்
S.K.V முகம்மது சுஐபு

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image