பால் உற்பத்தியாளர்கள் சிறு விவசாயிகள் சங்கம் சார்பில் கொடியேற்று விழா

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல் பள்ளிப்பட்டு பால் உற்பத்தியாளர்கள் சிறு விவசாயிகள் சங்கம் சார்பில் கொடியேற்று விழா மற்றும் பெயர் பலகை திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. மேல்பள்ளிப்பட்டு பால் கூட்டுறவு சங்கம் அருகில் நடைபெற்ற விழாவிற்கு பால் உற்பத்தியாளர்கள் சிறு விவசாயிகள் சங்கத் தலைவர் குமரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் மாதையன், பாபு ராஜேஷ் வேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறு விவசாயிகள் சங்க செயலாளர் நாகராஜ் அனைவரும் வரவேற்று பேசினார். மாவட்டத்தலைவர் திருஞானசம்பந்தம் கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார் மற்றும் மாவட்ட துணைத்தலைவர் நாராயணசாமி சங்கத்தின் பெயர் பலகை திறந்து வைத்தார். சங்க உறுப்பினர்களுக்கு மாநில நிர்வாக குழு உறுப்பினர் வீரபத்திரன் அடையாள அட்டை வழங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.சர்தார், மாவட்ட தலைவர் முத்தையன், வஜீர் பாஷா, சேட்டு வேலு உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர், கூட்டத்தில் மத்திய மாநில அரசுகள் சிறு விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களை உரிய இலக்கு நிர்ணயம் செய்ய வேண்டும், விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்ய செய்ய வேண்டும், பால் உற்பத்தியாளர்களுக்கு கரோனா நிதியாக லிட்டருக்கு 10 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கிட வேண்டும் என்று கோரிக்கை விட்டனர் நிகழ்ச்சியின் முடிவில் சிறு விவசாயிகள் சங்க பொருளாளர் சங்கர் நன்றி கூறினார்..

செய்தியாளர் செங்கம் சரவணகுமார்

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image