முதலமைச்சர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மதுரை சோழவந்தான் தொகுதி அதிமுக எம்.எல்.ஏவிற்கு கொரோனா. தனியார் மருத்துவமனையில் அனுமதி.

மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தொகுதி உறுப்பினரான மாணிக்கத்திற்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் மதுரை கே.கே.நகர் பகுதியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 6ஆம் தேதி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற ஆய்வுகூடத்தில் பங்குபெற்றார் என்பதும் முதலமைச்சரை வரவேற்றார் என்ற நிலையில் கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது விழாவில் கலந்துகொண்டவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்ற உறுப்பினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் அவருடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைபடுத்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூவிற்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் தற்போது அதிமுக சட்டமன்ற உறுப்பினருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

All Your Home Needs @ One Place

All Your Home Needs @ One Place

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image