திருக்குறள் முற்றோதுதல் போட்டி ரூ. 10 ஆயிரம் பரிசு! திமலை மாவட்ட ஆட்சியர் தகவல்.

 திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது; தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் ஆண்டுதோறும் திருக்குறள் முற்றோதுதல் போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகின்றது. அதன்படி இந்த ஆண்டு திருக்குறள் முதல் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் அதற்கான விண்ணப்பத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் பெற்று பூர்த்தி செய்து அளிக்கலாம். அல்லது www.tamilvalarchithurai.com என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவேற்றலாம். இப்போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் 1,330 திருக்குறளையும் ஒப்புவிக்க வேண்டும். திறனரி குழுவினர் மூலம் தேர்வு செய்யப்ப டும் 70 மாணவர்களுக்கு ரூ. 10 ஆயிரம் பரிசு தொகையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும். மேலும் 1330 திருக்குறளையும் முழுமையாக ஒப்புவிக்க வேண்டும். அதோடு இயல் எண் குறள் எண் அதிகாரங்கள் ஆகியவற்றை தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

செய்தியாளர் செங்கம் சரவணகுமார்

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image