கலைஞர் நினைவு நாளையொட்டி திருவண்ணாமலையில் தூய்மை பணியாளர்களுக்கு நலதிட்ட உதவிகள்.

திருவண்ணாமலை சாரோன் நகரில் அமைந்துள்ள மாவட்ட திமுக அலுவலகத்தி மறைந்த முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் திமுக தலைவராக இருந்தவருமான கலைஞரின் 2ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அவரது திருவுருவ படத்திற்கு திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சரும் மற்றும் திருவண்ணாமலை சட்டமன்ற உறுப்பினருமான எ.வ.வேலு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். நினைவு நாளையொட்டி மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம் திருவண்ணாமலை சிறப்பாக பணியாற்றி வரும் கொரோனா தடுப்பு பணியில் தீவிரமாக பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்கள் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்கள் மற்றும் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தெற்கு மாவட்ட கழக செயலாளர் எ.வ.வேலு பேசும்போது, திமுக தலைவர் மு க ஸ்டாலின் ஆணைக்கிணங்க முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் 2ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கவேண்டும் என்று ஆணையிட்டதற்கிணங்க திருவண்ணாமலையில் தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது என்று பேசினார். நிகழ்ச்சியில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, கவிஞர் சாவல் பூண்டி சுந்தரேசன் நகர ம,முன்னாள் நகரமன்ற தலைவர் ஸ்ரீதரன் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் செங்கம் சரவணகுமார்

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image