பல வருட குப்பை கிடங்கை அகற்றும் முயற்சியில் கீழக்கரை SDPI கட்சி..

கீழக்கரை  கிழக்குத் தெரு 3வது வார்டில் உள்ள குப்பை கிடங்கில் ஏறத்தாழ இருபது ஆண்டுகளாக குப்பைகள் கொட்டப்பட்டு, இதனால் அருகில் உள்ள இடங்கள் மாசுபட்டு மிகவும் மோசமான நிலையை அடைந்து வருகிறது.

இது தொடர்பாக எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட இடத்தை பார்வையிட்டு அதை உடனடியாக மாவட்ட ஆட்சியர் மற்றும் கீழக்கரை நகராட்சி ஆணையாளர் ஆகியோருக்கு குப்பைகளை முற்றிலுமாக அகற்றி விட்டு பூங்கா கொண்டு வரவேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்தனர்.

அதன் அடிப்படையில் அப்பகுதி சிறிது சுத்தம்  செய்யப்பட்டது, ஆனால் அப்பகுதியில் உரக்கிடங்கு கொண்டு வர ஏற்பாடு நடப்பதாக அப்பகுதி மக்கள் மீண்டும் முறையிட்டனர். இத்திட்டம் நிறைவேற்றினால் அப்பகுதி மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாவார்கள்.  இதை தடுக்கும் விதமாக SDPI கட்சியுடன் இணைந்து மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட தயாராகி வருகின்றனர்.

மக்களுக்கு தேவையான ஆரோக்கியமான பூங்கா அங்கு அமைக்கப்படவேண்டும், அது இல்லாமல் மக்களுக்கு பாதகமான செயல்பாடுகள் அங்கு நடக்கும் பட்சத்தில் எஸ்டிபிஐ கட்சி களமிறங்கி மக்களை ஒன்று திரட்டி மிகப்பெரிய ஒரு போராட்டத்தை நடத்தும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என SDPI கட்சி நகர தலைவர்,  ஹமீது பைசல் தெரிவித்தார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..