பண மோசடி வழக்கு தொடர்பாக சினிமா தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ராமநாதபுரம் டிஎஸ்பி அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார்.

பண மோசடி வழக்கு தொடர்பாக சினிமா தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ராமநாதபுரம் பஜார் போலீஸ் ஸ்டேஷன், டிஎஸ்பி அலுவலகத்தில் விசாரணைக்காக நேற்று (07.8.2020) மாலை ஆஜரானார். நேரம் கடந்ததால் இன்று மீண்டும் விசாரணைக்கு அழைத்தனர். இது குறித்து ஞானவேல் ராஜா கூறியதாவது,ராமநாதபுரம் டிஎஸ்பி., வெள்ளைத்துரை முன்னிலையில் சினிமா தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா விசாரணைக்கு இன்று(08.8.2020) ஆஜரானார். இதன் பின்னர் ஞானவேல் ராஜா கூறியதாவது: டிஎஸ்பி., ஒரு மணி நேரம் என்னிடம் விசாரித்தார். 64 கேள்விகள் கேட்டார். சினிமா தயாரிப்பு, விநியோகம் செய்து வருகிறேன். சேலத்தைச் சேர்ந்த சினிமா விநியோகஸ்தர் ஒருவர் மூலம் நீதிமணி அறிமுகமானார். அவரும் நிறைய படங்கள் விநியோகம் செய்து வருகிறார். அதற்குரிய ஆவணங்களுடன் என்னை தொடர்பு கொண்டார். அவரும் சினிமா விநியோகம் செய்து வந்ததால் தான் நானும் சினிமா எடுக்க உடன்பட்டேன். தமிழகம் முழுவதும் மகாமுனி சினிமா விநியோக உரிமை தொடர்பாக நீதிமணி என்னை தொடர்பு கொண்டார். அவர் மீதான நிதி மோசடி விவகாரம் குறித்தும் என்னிடம் விசாரித்தார். எனக்கு தெரிந்த விஷயங்களை பகிர்ந்தேன். அவர் நிதி நிறுவனம் நடத்தியது என்பது இந்த வழக்கு பதிவு, பத்திரிகைகளில் வெளியான செய்திகளுக்கு பின்னர் தான் தெரியும். நீதிமணி ரியல் எஸ்டேட், மலேசியாவில் ஓட்டல் தொழில் செய்து வருகிறார் என்பது மட்டுமே தெரியும். போலீசில் நீதிமணி அளித்த விவரங்கள் பற்றி எனக்கு தெரியாது. வரும் 10ஆம் தேதி மாலை 3 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு அழைத்துள்ளனர் என்றார்.

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image