ரேஷன் கடையில் எப்பொழுது இலவச முக கவசம் கிடைக்கும்…??

கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் தவித்து வருகிறது இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தியது மேலும் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டது. முக கவசம் அணிந்து பொதுமக்கள் வெளியே வரவேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையை தமிழக அரசு அனைத்து நியாயவிலை கடைகளிலும் நபருக்கு இரண்டு முக கவசங்கள் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த மாதம் 26ம் தேதி இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார் .உணவுத்துறை அமைச்சர் காமராஜ் 2&3 தேதிகளில் இலவச ரேஷன் பொருட்களுக்கு வழங்கப்படும் டோக்கன் உடன் அதற்கான டோக்கனும் . வழங்கப்படும் என அறிவித்திருந்தார். மேலும் 5 ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் இலவச முக கவசம் வழங்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று தேதி 8 இன்று வரையிலும் மதுரை மாவட்டத்தில் எந்த ஒரு ரேஷன் கடையில் முக கவசங்கள் வழங்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சுமார் 20 சதவீத பொதுமக்கள் இலவச ரேஷன் பொருட்களை வாங்கி சென்று விட்டனர். ஆனால் முககவசம் இதுவரை வழங்கப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது. ரேஷன் கடை ஊழியரிடம் கேட்டதற்கு இதுவரை எங்களுக்கு இலவச முகக் கவசங்கள் வரவில்லை எனவும் வந்தவுடன் வினியோகம் செய்து விடுவோம் எனவும் தெரிவித்துள்ளார் எப்போது கிடைக்கும் இலவச முக கவசம் ????

செய்தியாளர் வி. காளமேகம் மதுரை மாவட்டம்

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image