
மதுரை மாவட்டம் பாலமேட்டில் தொட்டிலிருந்த தவறி விழுந்த குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்தது.பாலமேடு கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் தம்பிராஜ் மனைவி அழகு ஆகியோருக்கு பிறந்த 70 நாளாகிய ஆண் குழந்தை. கடந்த ஆகஸ்ட் ஒன்றாம் தேதி தொட்டியிலிருந்து தவறி விழுந்து பாலமேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டு, பிறகு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை சிகிச்சை மாலை பலனின்றி இறந்து விட்டதாம்.இது குறித்து பாலமேடு காவல் உதவி ஆய்வாளர் பாலசுப்ரமணியம் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
செய்தியாளர் வி. காளமேகம். மதுரை மாவட்டம்