உசிலம்பட்டி அருகே ஒத்தப்பட்டியில் உள்ள அசுவமாநதி ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்றி தூர்வார தமிழ்நாடு மக்கள் உரிமை பாதுகாப்பு ஊழல் ஒழிப்பு சங்கத்தினர் கோரிக்கை .

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே போத்தம்பட்டி பஞ்சாயத்திற்குட்பட்ட ஒத்தப்பட்டி கிராமத்தில் உள்ள அசுவமாநதி ஓடையை தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் அசுவமா நதி ஓடையை சிலர் ஆக்கிரமித்துள்ளதால் ஆக்கிரமிப்புக்களை அகற்றிய பின் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், உசிலம்பட்டி கன்மாயை தூர்வாரி நடைபயிற்சி பாதை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உசிலம்பட்டி கோட்டாட்சியருக்கு தமிழ்நாடு உரிமை பாதுகாப்பு ஊழல் ஒழிப்பு சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதில் நகர தலைவர் முருகன், செயலாளர் ரமேஷ், பொருளாளர் காட்டு ராஜா, கொள்கை பரப்பு செயலாளர் சுருளி வேல், நகர உறுப்பினர் மகா , மோகன் குமார் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

உசிலை சிந்தனியா

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image