தேனி மாவட்டத்தில் குளங்களை தூர் வாரும் பணிகளை துணை முதல்வர் துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு துணை முதலமைச்சர்ஓ. பன்னீர் செல்வத்தின் வழி காட்டுதலின் படி, மாவட்ட நிர்வாகத்துடன், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து குளங்கள் தூர் வாருவதற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.அதனடிப்படையில் தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டம், கெங்குவார் பட்டியில் உள்ள மத்துவார் குளம்,வடுகபட்டி அருகே மேல்மங்களம் கிராமத்தில் உள்ள இலக்கியம்பட்டி கண்மாய், பொட்டை வண்ணான் குளம் மற்றும் நெடுங்குளம் கண்மாய்களை தூர்வாரும் பணிகளை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கொடியசைத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து மரக்கன்றுகளை நடவு செய்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திர நாத் குமார், திட்ட இயக்குனர் திலகவதி, பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் சினேகா, ஆன்மீக சமூக ஆர்வலர் ஜெயபிரதீப், சொந்தகாரர் பாண்டியராஜன் மற்றும் வருவாய்த்துறையினர், பொதுப்பணித்துறையினர் மற்றும் ஆளும் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

சாதிக்பாட்சா நிருபர் தேனி மாவட்டம்

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image