ஊதியம் பிடித்தம் அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

மதுரையில் சத்துணவு ஊழியர்களின் ஒருநாள் சம்பளத்தை பிடித்தம் செய்ததைக் கண்டித்து வெள்ளிக்கிழமை மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மதுரை மாவட்ட அரசு ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த மேற்கு வட்டக்கிளை பொருளாளர் பாண்டிச் செல்வி தலைமை வகித்தார்.மதுரை மாவட்டத் தலைவர் மூர்த்தி முன்னிலை வகித்தார்.வடக்கு வட்டக்கிளை செயலர் இரா. தமிழ், கிழக்கு வட்டக்கிளை செயலர் பரமசிவன், மாவட்டச் செயலாளர் க. நீதிராஜா, ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். முடிவில் ஆ. செல்வம் நன்றி கூறினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image