அங்கொடா லொக்கா விவகாரம்: தனக்கு இதில் எந்த சம்பந்தமும் இல்லை .சிவகாம சுந்தரியின் முன்னாள் கணவர் பேட்டி

அங்கொடா லொக்கா மதுரையில் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் தனக்கு எந்த விதத்திலும் சம்பந்தம் இல்லை என்று வழக்கில் தொடர்புடைய சிவகாமசுந்தரியின் முன்னாள் கணவர் வழக்கறிஞர் வினோத் குமார் சிபிசிஐடி விசாரணைக்கு பிறகு பேட்டி.இலங்கை நிழலுலக தாதா அங்கொடா லொக்கா மதுரையில் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் சிபிசிஐடி கடந்த இரண்டு நாட்களாக விசாரணை மேற்கொண்டு வருகிறது. அவர் தங்கியதாக கூறப்படும் ரயிலார் நகர் கூடல் நகர் பகுதிகளில் சிபிசிஐடி போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்று மதுரை சொக்கி குளத்தில் அமைந்துள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் இவ்விவகாரத்தை தொடர்புடைய நபர்களுடன் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணைக்கு நேரில் ஆஜரானார்.இந்த வழக்கில் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள வழக்கறிஞர் சிவகாமசுந்தரி ன் முன்னாள் கணவர் வழக்கறிஞர் வினோத்குமார் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த 2006 ஆம் ஆண்டு தொடக்கம் சிவகாம சுந்தரிக்கும் திருமணம் நடைபெற்றது எனவும் அதற்கு பிறகு ஐந்து ஆண்டுகள் மட்டுமே அவருடன் வாழ்ந்ததாகவும் பிறகு மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்து விட்டதாகவும் கூறினார் அதற்கான காரணங்களில் சிவகாமசுந்தரி குடும்பத்தாருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பு இருந்தது தனக்கு பிடிக்கவில்லை என குறிப்பிட்டார்.

தற்போதைய அங்கொடா லொக்கா வழக்கு விவகாரத்தில் எந்த விஷயமும் தனக்கு தெரியாது என்றும் தனது முன்னாள் மனைவி சிவகாம சுந்தரியுடன் கடந்த மணவிலக்கு ஏற்பட்டுவிட்டது அதற்குப் பிறகு அவருடைய எந்தவித தொடர்பிலும் தான் இல்லைஎன்பதை சிபிசிஐடி விசாரணையில் தெளிவாக கூறிவிட்டதாக பேட்டியளித்தார்.தனக்கும் தனது முன்னாள் மனைவி சிவகாம சுந்தரிக்கும் கல்லூரி படிக்கும் காலத்திலேயே காதல் மலர்ந்து திருமணம் புரிந்து அதை குறிப்பிட்ட வினோத்குமார் கல்யாணத்திற்கு பிறகு இவர்களது குடும்பத்திற்கும் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும் தொடர்பு இருப்பது தான் அறிந்தததால் அதனை பலமுறை கண்டித்ததாகவும் ஒரு கட்டத்திற்கு பிறகு தான் அதிலிருந்து முற்றிலுமாக விலகி விட்டதாகவும் குறிப்பிட்டார்.இதற்கிடையே வழக்கறிஞர் சிவகாம ஜசுந்தரியின் பெற்றோர் பாண்டியம்மாள் மற்றும் தினகரன் ஆகியோர் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராகினர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image