இராஜசிங்கமங்கலத்தில் கூடுதல் ஏ.டி.எம் களை திறக்க வேண்டியும், ஏ.டி.எம் களில் பணம் நிரப்ப வேண்டியும் தீபம் இந்தியா அறக்கட்டளை மற்றும் மக்கள் பாதை இயக்கம் சார்பாக கோரிக்கை:

இராஜசிங்கமங்கலத்தில் கூடுதல் ஏ.டி.எம் களை திறக்க வேண்டியும், ஏ.டி.எம் களில் பணம் நிரப்ப வேண்டியும் தீபம் இந்தியா அறக்கட்டளை மற்றும் மக்கள் பாதை இயக்கம் சார்பாக கோரிக்கை மனு  வழங்கப்பட்டது.இராமநாதபுரம் மாவட்டம் இராஜசிங்கமங்கலம் பேரூராட்சி தற்பொழுது தாலுகாவாக செயல்பட்டு வருகிறது.சுற்றி இருக்கக்கூடிய கிராமங்களின் அடிப்படை தேவையை பூர்த்தி செய்ய அனைத்து கிராம மக்களும் இராஜசிங்கமங்கலம் பேரூராட்சிக்கு தான் வருகை தருகின்றனர். இராஜசிங்கமங்கலம் எஸ்.பி.ஐ வங்கி முதன்மை கிளையின் ஏ.டி.எம் கடந்த ஒரு வார காலமாக அடிக்கடி பழுது ஏற்பட்டு பணம் எடுக்க இயலாத சூழல் உருவாகி உள்ளது. மேலும் பணம் நிரப்பாமலும் இருக்கிறது. யாரேனும் பண பனிவர்த்தனை செய்தால் மட்டுமே அதிலிருந்து பணம் எடுக்க முடிகிறது.

மேலும் பூவாணிப்பேட்டை அருகில் உள்ள ஏ.டி.எம் பல நாட்களாக செயல்படாமல் மூடியே கிடக்கிறது. ஆகையால் இராஜசிங்கமங்கலம் பேரூராட்சியில் வசிக்கும் பொதுமக்கள், அருகிலுள்ள கிராமங்களில் உள்ள பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். ஏ.டி.எம் இயந்திரங்களை சரிசெய்ய வலியுறுத்தி கோரிக்கை வைக்கப்பட்டது.மனுவை பெற்ற எஸ்.பி.ஐ வங்கி கிளை மேலாளர் , ஐ.ஓ.பி வங்கி மேலாளர் கூடிய விரைவில் சரி செய்திட முயற்சி செய்வதாக உறுதியளித்தார்.மனு கொடுக்கும் போது தீபம் இந்தியா அறக்கட்டளை நிறுவனர் மதிவாணன், மக்கள் பாதை இயக்கம் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் நூருல் அமீன், இராஜசிங்கமங்கலம் ஒன்றிய பொறுப்பாளர்கள் ஆசிரியர் பாதுஷா ஆகியோர் உடனிருந்தனர்.

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image