பாசன கால்வாயை காணவில்லை..!! நூதன முறையில் போஸ்டர் அடித்து ஒட்டிய பொதுமக்கள்..!

மதுரை மாநகராட்சிக்குட்பட்ட அனுப்பானடி பகுதியை 56 -வது வார்டு தாய் நகர், பூம்புகார் நகர்,மாருதி நகர் உள்ளிட்ட பகுதியில் வழியாக அனுப்பானடி பெரிய கண்மாயில் இருந்து பனையூர் விவசாய நிலத்திற்கு செல்லக்கூடிய பாசனக் கால்வாயை பல ஆண்டுகளாக சிலர் ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டி உள்ளதாகவும், இதனால் விவசாயத்திற்கு முறையாக தண்ணீர் செல்ல வழி இல்லாமல் இருந்து வருவதாகவும் கால்வாய்கள் கழிவுநீர் குட்டையாக மாறியுள்ளதாகவும் உடனடியாக பாசன கால்வாய் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என ,அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் பல ஆண்டுகளாக மாநகராட்சியிடம் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாத காரணத்தால், காணாமல் போன பாசன கால்வாயை கண்டுபிடித்து தாருங்கள் எனக்கூறி ” காணவில்லை.!! காணவில்லை..!! பாசன கால்வாயை காணவில்லை.!!! என நூதன முறையில் போஸ்டர் எடுத்து மதுரை மாநகர் முழுவதும் அனுப்பானடி கிராம மக்கள் ஒட்டிய சம்பவம் மதுரையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image