ஆர்எஸ் மங்கலத்தில் பொதுமக்களிடம் அவமரியாதையாக பேசும் மின்வாரிய ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாகவே ஆர்.எஸ் மங்கலத்தில் மின் கணக்கீட்டில் குளறுபடிகள் நடைபெற்று வருகிறது.மின்சாரம் பயன்படுத்தப்பட்டதை விட அதிக ரீடிங் எடுக்கப்பட்டு சாதாரண கட்டணத்தை விட பன்மடங்கு அதிக கட்டணம் செலுத்தும் நிலை உள்ளது.வழக்கமாக செலுத்தும் மின்கட்டணத்தை விட தற்பொழுது மின் கட்டணம் ரூபாய் 2000, 4000, 5000, 10000, 15000, 25000 என்று பன்மடங்கு அதிகமாக செலுத்தும் நிலை உளள்ளது.கொரோனா காலங்களில் ஏழை ஏளிய மக்கள் முறையான வருமானம் இன்றி கஷ்டப்படும் சூழலில் மின்கட்டணச்சுமையினால் மன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர்.

பயனாளி இல்லாமல் பூட்டிக்கிடக்கும் வீடுகளுக்கும் கூட மின் கட்டணம் ரூபாய் 2000 வரை செலுத்தும் நிலை உள்ளது.ஆர்எஸ் மங்கலம் மின்சாரவாரிய அதிகாரிகளிடம் முறையிட்டால் மிகவும் அலட்சியமாக பதில் கூறுகிறார்கள்.ஆர்எஸ் மேடம் ரேகா அவர்களிடம் தவறான மின் கணக்கீடு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கேட்டால் பொறுப்பற்றமுறையில் அலட்சியமாகவும், பொதுமக்களை அவமரியாதை செய்யும் விதமாக பேசுகிறார்கள்.தவறாக மின் கணக்கீடு எடுத்த மின் கணக்கீட்டாளர் மற்றும் ஆர்எஸ் மேடம் ரேகா அவர்கள் மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுக்குமாறு இராஜசிங்கமங்கலம் இளைஞர் மஸ்ஜித் சேவைக் குழு சார்பாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image