கன்னியாகுமரி மாவட்டம் மருங்கூர் அருகே மலையடிவார கால்வாயில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய டிம்போ பறிமுதல்… ஓட்டுநர் தப்பி ஓட்டம்…

கன்னியாகுமரி மாவட்டம் வனத்துறைக்கு உட்பட மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.

இந்நிலையில் மருங்கூர் அருகே வனத்துறை எல்லைக்கு உட்பட பகுதிகளில் சமூக விரோதிகள் கால்வாயிகளில் மணல் கொள்ளையில் ஈடுப்பட்டு வருவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலை அடுத்து மருங்கூர் கால்வாய் பகுதிக்கு சென்ற வனத்துறையினர் கால்வாயில் சட்டவிரோதமாக டிம்போவில் மணல் அள்ளி கொண்டு இருந்த டிம்போவை மடக்கி பிடித்தார்கள். ஆனால் வனத்துறையினரை கண்டதும் டிம்போ ஓட்டுநர் மற்றும் மணல் அள்ளி கொண்டு இருந்தவர்கள் தப்பி ஓடிவிட்டார்கள்.

இதனால் திருட்டு மணலுடன் இருந்த டிம்போவை பறிமுதல் செய்து அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் வனத்துறையினர் ஒப்படைத்தார்கள். தப்பி ஓடிய டிம்போ ஓட்டுநரையும் மணல் அள்ளிய கும்பலையும் போலிஸார் தேடி வருகிறார்கள்.

செய்தியாளர். வி. காளமேகம் ,மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..