எழுமலையில் தெருக்கூத்து மூலம் பொதுமக்களிடையே கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி .

தமிழகம் முழுவதும் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அதனை தடுக்கும் முயற்ச்சியை தமிழக சுகாதார துறை மேற்க்கொண்டு வருகிறது. மேலும் பொதுமக்களிடையே கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை பேரூராட்சி பகுதிகளில் கொரோனா தொற்று அதிகளவில் பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில் பொதுமக்களிடம் நாடகக்கலைஞர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டு வருகின்றது.. எழுமலை பேரூராட்சி அதிகாரிகளுடன், மதுரை நாட்டிய நாடக கலைஞர்கள் குழுவைச் சேர்ந்த ஈஸ்வரன், தலைமையிலான குழுவினர் தமிழகத்தில் அழிந்து வரும் பழமையான கலையான தெருக்கூத்து மூலம் பொதுமக்களிடையே கொரோனா வைரஸ் குறித்து நாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இதில் பொதுமக்கள் சமூக இடைவெளி விட்டு தெருக்கூத்தை ரசித்தனர்.இதில் எழுமலை பேரூராட்சி செயல்அலுவலர் ஜெயமாலு, பரமேஸ்வரன், மற்றும் 58கிராம இளைஞர்கள் குழுவைச் சேர்ந்த சௌந்திரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

உசிலை சிந்தனியா

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image